விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.
- பூச்சிகளின் இனப்பெருக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.
- காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே நாகக்குடி ஊராட்சியில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.
இதில் 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 5 விவசாயிகள் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் சிலந்தி, பொறிவண்டு, தரை வண்டு, ஊசித்தட்டான், குளவி என தனித்தனியே பெயர்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு குழுவும் வயல் பகுதிக்கு சென்று நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை இனம் கண்டு அவைகளின் இருப்பிடம், உணவு, இனப்பெருக்கம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ், கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடு களை பகுதி உதவி வேளாண்மை அலுவலர் துர்கா தேவி செய்திருந்தார்.
பயிற்சியில் பார்வையிட்ட வகையில் வயல்களில் பாசி அதிகளவு காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.