உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி பகுதியில் உழவர் பெருவிழா

Published On 2023-10-09 09:36 GMT   |   Update On 2023-10-09 09:36 GMT
  • கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பி. எஸ். ஐஸ்வர்யா வரவேற்றார்.
  • நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

அரவேணு,

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் வளர்ந்து வரும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் நடுஹட்டி கிராமத்தில் உழவர் பெருவிழா நடைபெற்றது.

மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை தாங்கினார். நடுஹட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் இ. ராம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை நாற்று தொகுப்புகளை வழங்கினார்.

உழவர் பெருவிழாவில் பிரதம மந்திரி கௌரவ ஊக்க தொகை பெற விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

முன்னதாக கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பி. எஸ். ஐஸ்வர்யா வரவேற்றார்.

இறுதியில் துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News