உள்ளூர் செய்திகள்

தியேட்டருக்கு வந்த இயக்குனர் சற்குணம் மற்றும் நடிகர் சிங்.முருகாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தஞ்சைக்கு வந்த பட்டத்து அரசன் திரைப்பட இயக்குனர்- நடிகருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Published On 2022-11-29 09:43 GMT   |   Update On 2022-11-29 09:43 GMT
  • வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரை கதைக்களமாக கொண்டு பட்டத்து அரசன் என்ற திரைப்படம் கடந்த 25-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாகவும், ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதைவிட முக்கிய கதை பாத்திரங்களில் ராஜ்கிரன், ராதிகா, சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை சேர்ந்த சிங். முருகா, அதே பகுதியை சேர்ந்த குழந்தை நட்சத்திரங்களான சிங். கோகுல், சிவானிசிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டை சேர்ந்த சற்குணம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் உள்ளிட்ட 6 படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.

இதில் வாகை சூடவா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் மற்றும் படத்தில் நடித்த வல்லத்தை சேர்ந்த சிங். முருகா ஆகியோர் தஞ்சையில் உள்ள விஜயா தியேட்டருக்கு வந்தனர்.அவர்களுக்கு தஞ்சை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது இயக்குனர் சற்குணம் அளித்த பேட்டியில், பட்டத்து அரசன் நான் இயக்கிய ஏழாவது திரைப்படம் ஆகும்.

அடுத்து ஒரு வெப் சீரியல் இயக்குகிறேன்.அதனை தொடர்ந்து நான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

நடிகர் சிங். முருகா கூறும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை கதைக்களமாக கொண்ட படத்தில் தஞ்சாவூரை சேர்ந்த நான் நடித்துள்ளது பெருமை அளிக்கிறது.மேலும் குழந்தை நட்சத்திரங்களாக நமது பகுதியை சேர்ந்த சிங் .கோகுல், சிவானிசிங் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளனர்.

படத்தை இயக்கிய சற்குணமும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.நான் அடுத்து வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அதன் பின்னர் அடுத்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Tags:    

Similar News