பலியானவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பஞ்சாயத்து ஊழியர்களால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து பலியானவரின் மனைவி கலெக்டரிடம் மனு
- கடந்த சில தினங்களுக்கு முன்பு தோண்டிய குழி
- மூடாமல் சென்றுவிட்டனர்.
புதுச்சேரி:காரைக்காலை அடுத்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், வடபாதி கிராமம் அருகே, தண்ணீர் குழாயை ஆய்வு செய்யும் பொருட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய குழி ஒன்று தோண்டியுள்ளனர். அதன் பின்னர் அந்த குழியை மூடாமல் சென்றுவிட்டனர்.இந்நிலையில், வடபாதி கிராமத்தைச்சேர்ந்த இளங்கோ வன் (37) என்பவர், அந்த குழியின் அருகில் உள்ள மதகு ஒன்றில் தூங்கினார். தூக்கக்கலகத்தில் அந்த குழியில் விழுந்து மயங்கிவிட்டார். இரவு நேரம் என்பதால் யாரும் அவரை பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த குழியி லேயே அவர் இறந்துவிட்டார்.
இளங்கோவனின் உடலை பிரதேச பரிசோதனைக்காக கொன்டு சென்றபோது, இளங்கோவனின் மனைவி மற்றும் உறவினர்கள், பிரதே பரிசோதனை கூடத்தை முற்றுகையிட்டு இளங்கோவனின் இறப்பிற்கு நியாயம் கேட்டு கோஷம் எழுப்பினர். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றனர். விபரம் அறிந்த வட்டாச்சியர் மதன்குமார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத கிராமமக்கள், மாவட்ட விடுத்கலைச்சிறுத்தை கட்சி நிர்வாகிகளுடன் சென்று, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் தோண்டப்பட்டு, மூடாமல் சென்ற குழியில்தான் இளங்கோவன் விழுந்து பலியாகியுள்ளார். எனவே அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என மனு வழங்கி முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்தாக கலெக்டர் உறுதியளித்தார்.