உள்ளூர் செய்திகள்

தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

Published On 2022-07-28 09:41 GMT   |   Update On 2022-07-28 09:41 GMT
  • நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தஞ்சாவூர் :

தஞ்சை தமிழ்பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன் வெளியி–ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (TURCET 2020) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க 1.8.2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

டார்செட் 2020-ல் தேர்ச்சி பெற்றவர்கள் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு 2020 தேர்வுத் தகுதி செல்லாது. நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 பருவத்திற்குப் பிறகு முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று பதிவாளர் முனைவர் தியாகராஜன் தெரிவித்தார்.

தற்போது ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) பட்டப் படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.8.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News