உள்ளூர் செய்திகள்

மேயர் சரவணன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற போது எடுத்தபடம்.

மாடுபிடிக்க அனுபவம் உள்ளவர்களை பயன்படுத்த வேண்டும் -மேயரிடம் மனு

Published On 2022-11-22 16:08 IST   |   Update On 2022-11-22 16:08:00 IST
  • வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது
  • போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது வரவேற்கத்தக்கது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் சரவணன் தலைமையில் வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் அனுபவம் உள்ளவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதற்கிடையே கூட்டரங்கிற்கு வந்த கவுன்சிலர்களில் சிலர் கால்நடைகளை முன்னறிவிப்பின்றி ஏலம் விடக்கூடாது. சில அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களை அவதூறாக பேசுகின்றனர். அதனை தடுக்க வேண்டும் என கூறினர்.

Tags:    

Similar News