உள்ளூர் செய்திகள்

நத்தம் விசுவநாதன்

ஓ.பி.எஸ்.உடன் சசிகலா, தினகரன் ரகசிய சந்திப்பு நடத்துகின்றனர் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு

Published On 2023-03-06 12:16 IST   |   Update On 2023-03-06 12:16:00 IST
  • கொடைக்கானலில் முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார்.
  • ஓ.பன்னீர்செல்வ த்துடன் சசிகலா, தினகரன் ஆகியோர் ரகசிய சந்திப்பு நடத்தி வருகின்றனர் என பேசினார்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ஈரோட்டில் வள்ள ல்போல் பணத்தை தி.மு.க. வினர் வாரி இரைத்து ஜனநாயக படுகொலையை நடத்தி வெற்றிபெற்றுள்ள னர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வழிப்பறி, கொள்ளை, கொலை போன்றவை அதிகரித்து வருகிறது.

பொதுமக்களின் உயிரு க்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக ஆதாயம் அடையும் வகையில் செய்ய ப்படும் கொலை களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புள்ளிவிபரங்களுடன் சட்டமன்றத்தில் எடுத்து கூறியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்க ளால் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. அனைத்து ரவுடிகளும் தங்களது ஆட்சிதான் நடக்கிறது என்று நினைத்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் கமிசன் ஏஜெண்டுகளாக மாறி உள்ளனர்.

வடமாநில தொழி லாளர்கள் பிரச்சினை குறித்து சமூகவலைதளங்கள் பெரிது படுத்தி வருகின்றன. அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஓ.பன்னீ ர்செல்வம் எந்தஒரு நிலை யான முடிவு எடுக்கமுடியாத நிலையில் தடுமாற்றத்தில் உள்ளார். அவர் அரசியல் ரீதியாக வளர்ந்தவர் இல்லை. அயராத உழைப்பு இல்லை. பேச்சாற்றலும் இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நிழலில் வளர்ந்தவர். தனிப்பட்ட திறமை இல்லாதவர். எனவே அவர் அரசியல் பற்றி பேசாமல் ஓய்வு எடுக்கலாம்.

அவரிடம் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பல நிர்வாகிகள் பல அரசியல் கட்சிகளுக்கு சென்று வந்தவர்கள். இதில் புகழேந்தி ஓ.பன்னீர்செல்வ த்தாலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். கு.ப.கிரு ஷ்ணன் என்னை எதிர்த்து போட்டியிட்டவர். தற்போது இரட்டை இலை சின்னம் குறித்து அவர் பேசுவது வேடிக்ைக. ஓ.பன்னீர்செல்வ த்துடன் சசிகலா, தினகரன் ஆகியோர் ரகசிய சந்திப்பு நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 2-வது தர்மயுத்தம் நடத்தப்போவ தாக ஓ.பி.எஸ்.கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News