உள்ளூர் செய்திகள்

கோவையில் 5 மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை

Published On 2023-06-14 08:55 GMT   |   Update On 2023-06-14 08:55 GMT
  • தேவராஜின் மனைவி ஜாய்ஸ் தனக்கு தெரியாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.
  • கோவை அரசு ஆஸ்பத்தி டாக்டர் ஜெயசிங் தலைமையிலான டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

கோவை,

கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யா காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 35).

இவர் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி அவரது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி- சிறுவாணி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தேவராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு ஜனவரி 30-ந் தேதி தேவராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பின்னர் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தேவராஜின் உடலை புலியகுளம் அருகே உள்ள சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் தேவராஜின் மனைவி ஜாய்ஸ் என்பவர் தனக்கு தெரியாமல் தனது கணவரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர். எனவே மீண்டும் தனது கணவர் தேவராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சவுரிபாளையம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட தேவராஜின் உடல் இன்று மீண்டும் ேதாண்டி எடுக்கப்படுகிறது. அவரது உடலை கோவை அரசு ஆஸ்பத்தி டாக்டர் ஜெயசிங் தலைமையிலான டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News