உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரர் கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-08-09 15:19 IST   |   Update On 2023-08-09 15:19:00 IST
  • இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் பழனிக்கு உடந்தையாக இருந்த தந்தை அய்யாவு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காசி, ரேவதி, தனபாக்கியம், ஆகியோர் விடுதலை செய்யப் பட்டனர்.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம், தொப்பூர் தர்கா பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு, விவசாயி யான இவருக்கு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஈஸ்வரன் (45), லாரி டிரைவர் பழனி (42), ராமன் (40), காசி (35) ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். அனை வருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

அய்யாவுக்கு வீட்டின் அருகே நாலு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனித்தனியாக பத்திர பதிவு செய்யாமல் நான்கு பேரும் அனுபவித்துக் கொள்ளு ங்கள் என பிரித்துக் கொடுத்து ள்ளார்.

பிரித்து கொடுத்துள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டு களாக தகராறு இருந்து வந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வர னுக்கும், அவரது தம்பி பழனிக்கும் தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட நிலத்தகராறில் முன் விரோதம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி முன்னாள் ராணுவ வீரர் ஈஸ்வர னுக்கும், லாரி டிரைவர் பழனிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் பழனி தான் வைத்திருந்த அறிவாளை எடுத்து ஈஸ்வரன் தலையை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த ஈஸ்வரன் மனைவி சரண்யாவுக்கும் வெட்டு விழுந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் பழனிக்கு உடந்தையாக இருந்த தந்தை அய்யாவு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை நடந்தது.

இதில் நீதிபதி மோனிகா முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த லாரி டிரை வர் பழனி, அவரது தந்தை அய்யாவு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

மேலும் சரண்யாவை வெட்டிய வழக்கில் பழனிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காசி, ரேவதி, தனபாக்கியம், ஆகியோர் விடுதலை செய்யப் பட்டனர். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News