உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.

எட்டுக்குடி முருகன் கோவில் கும்பாபிஷேகம்; துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

Published On 2023-01-28 15:07 IST   |   Update On 2023-01-28 15:07:00 IST
  • கருட பகவான் கோவிலை வலம்வர கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • சுப்ரமணியருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் புகழ்பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23-ந் தேதி கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

நேற்று லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.

கருட பகவான் கோயிலை வலம் வர ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

Tags:    

Similar News