60 அடி உயரத்தில் இருந்து கொட்டும் நீர் வீழ்ச்சி
- அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப்பாறையில் 60 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- இந்த நீர் வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப் பாறை நீர்வீழ்ச்சி யில் தண்ணீர் கொட்டுவதால் பார்ப்பதற்கும் குளிப்ப தற்கும் சுற்று வட்டாரத்தில் இருந்து பொதுமக்கள் செல்கின்றனர்.
சேலம் மாவட்டப் பகுதியில் ஆரம்பித்து ஈரோடு மாவட்டத்தில் முடியும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் பகுதியாக பாலமலை உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் தூரமும் கடல் மட்டத்தில் இருந்து 5967 மீட்டர் உயரம் கொண்ட தாக பாலமலை இருப்பதாக கூறப்படுகிறது.
மலையில் மழை பொழிவு ஏற்பட்டால் மழையின் கீழ் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரும் பால மலையில் நெரிஞ்சிபேட்டை, சின்னப்பள்ளம், ஊமா ரெட்டியூர், குருவரெட்டியூர், கண்ணாமூச்சி போன்ற பகுதிகளில் மிக முக்கியமான 7 பள்ளங்கள் உள்ளது. இதில் மழை காலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும்.
ஆனால் இந்த பகுதிகளில் கடந்த 3 வருடங்களாக போதிய மழை பெய்யாததால் இந்த பள்ளங்களில் தண்ணீர் வரத்து இன்றி வரண்டு போய் கிடந்தது. இதனால் ஏரிகளும் தண்ணீ ரின்றி காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அம்மா பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பாலமலை சுற்றியுள்ள சிறு, சிறு அருவி களில் தண்ணீர் கொட்டி வருகிறது.
மலை பகுதியில் பெய்த மழையில் காரணமாக சின்னபள்ளம் வழுக்குப் பாறை நீர் ஊற்று, நெரிஞ்சி ப்பேட்டை வெள்ளைபாறை நீர் ஊற்று, கொடம்பக்காடு, ஊமா ரெட்டியூர் யானை கட்டிபள்ளம், நாவரளி ஊற்று, குருவரெட்டியூர் பகுதியில் உள்ள வெள்ளை பாறை, பெருமாள் கோவில் நீருற்று, போன்ற பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் பாலமலை பகுதியில் பல்வேறு இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. மேலும் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் வழுக்குப்பாறையில் 60 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பசுமையாக காட்சி தருகிறது.
இது பற்றி அறிந்ததும் இந்த நீர் வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த அருவிக்கு செல்வதற்கு மேட்டூர் - பவானி மெயின் ரோட்டில் சின்னப்பள்ளத்தில் இருந்து மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் ரோடு செல்கிறது. அதன் பின்பு மலைப்பாதையில் 1 கிலோ மீட்டர் தூரம் ஒத்தையடி பாதையில் மலை ஏற வேண்டும்.
மலை மேல் செல்ல சற்று கட்டினமாக இருந்தாலும் அதனையும் பொருட்படு த்தாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மேலே சென்று கொட்டும் அருவி யில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, இந்த அருவியில் தண்ணீர் கொட்டுவதால் குளிப்பதற்கு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குடும்பம் குடும்பமாக வந்த வண்ணம் உள்ளனர். அருவிக்குச் செல்ல கரடு முரடான பாதையில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.
பருவ மழை பெய்யும் காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி பாதை சீரமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.