உள்ளூர் செய்திகள்

9 கிலோ புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

Published On 2022-12-09 15:16 IST   |   Update On 2022-12-09 15:16:00 IST
  • வாலிபர் கருப்பு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
  • கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மைசூர்-சக்தி ரோடு ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

அப்போது பஸ் நிலையம் அருகே ஒரு வாலிபர் கருப்பு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து போலீசார் சோதனை செய்ததில் கருப்பு பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் என 9 கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அடுத்த கோட்டு வீராம்பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அல்லாபகஸ் (38) என தெரிய வந்தது.

இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.6,500 ரொக்க பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News