அணை பகுதிகளில் பரவலாக பெய்த மழை
- ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
- இந்த திடீர் மழையால் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து கரும் மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. மாலை முதல் இரவு வரை ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணை பகுதியில் 22 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
இதேப்போல் நம்பியூர், எலந்த குட்டைமேடு, பவானிசாகர், சத்திய மங்கலம், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
எதிர்பாராத வகையில் பெய்த இந்த திடீர் மழையால் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடிவேரி அணை-22, நம்பியூர், எலந்த குட்டை மேடு-18, பவானிசாகர்-16.40, சத்தியமங்கலம்-15, குண்டேரி பள்ளம் அணை-11.60, வரட்டுப்பள்ளம் அணை-10.80, தாளவாடி-1.50.