உள்ளூர் செய்திகள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

2,504 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-03-25 10:02 GMT   |   Update On 2023-03-25 10:02 GMT
  • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து திருமண நிதி உதவித்திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 335 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதி உதவியும்,

335 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான தங்கமும், புதுமை பெண் நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ் 2169 மாணவிகளுக்கு ரூ.43 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தம் ரூ.3 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2504 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதேபோல் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறந்த பட்டு வளர்ப்பு விவசாயிகள் 14 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் கணேச மூர்த்தி எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News