உள்ளூர் செய்திகள்

கிராம வேளாண் முன்னேற்றக்குழு- விவசாயிகள் பயிற்சி

Published On 2023-10-06 09:12 GMT   |   Update On 2023-10-06 09:12 GMT
  • பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
  • கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

ஈரோடு:

பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24-ம் ஆண்டு கலை ஞர் திட்டம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்ட பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு காரீப்பின் பருவ விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.

இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இய க்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் எள் பயிர்களுக்கான உழவு, ரகத்தேர்வு, மண்பரிசோதனை மற்றும் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நிலக்க டலை, எள் மற்றும் மக்கா ச்சோளம் போன்ற பயிரில் விதை தேர்வு முறை, விதை ப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்கு தல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

பவானி உதவி வேளா ண்மை அலுவலர் சித்தையன் கிராம வேளாண் முன்னேற்ற க்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், பூங்கோதை ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News