உள்ளூர் செய்திகள்

மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம்

Published On 2022-06-10 09:21 GMT   |   Update On 2022-06-10 09:21 GMT
  • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
  • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு:

வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

Tags:    

Similar News