உள்ளூர் செய்திகள்

வீரவணக்க கூட்டம்

Published On 2022-07-06 09:32 GMT   |   Update On 2022-07-06 09:32 GMT
  • சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது.
  • இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

சென்னிமலை:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க போராடி உயிர் நீத்த 60 விவசாயிகள் மற்றும் இலவச மின்சார உரிமை காத்திட டெல்லி போராட்ட களத்தில் உயிர் நீத்த 713 விவசாயிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஜுலை 5-ந் தேதி தமிழ்நாடு உழவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி சென்னிமலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் வீரவணக்க கூட்டம் நடைபெற்றது.

சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த கூட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு ஒருங்கிணைப்பாளர் பூபதி, பாசன சபை தலைவர் வி.எம்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டங்களில் உயிர் நீத்த விவசாயிகளின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

Tags:    

Similar News