உள்ளூர் செய்திகள்

வியாபாரி திடீர் சாவு

Published On 2023-07-10 15:13 IST   |   Update On 2023-07-10 15:13:00 IST
  • இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கோவிந்தனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
  • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சுள்ளகந்தன் வலசை சேர்ந்தவர் கோவிந்தன்(36). இவர்மகளிர் குழுவில் கடன் பெற்று அந்த பணத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் வாங்கி அந்த வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார்.

தொழில் நஷ்டம் அடைந்ததால் வாகனத்திற்கான மாத தவணை 2 மாதமாக செலுத்தவில்லை. இதனால் கோவிந்தன் சரிவர சாப்பிடாமல், தூங்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கோவிந்தன் திடீரென மயங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கோவிந்தனை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு கோவிந்தன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News