உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-01-26 14:50 IST   |   Update On 2023-01-26 14:50:00 IST
  • சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார்.
  • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

கோவை மாவட்டம் சர்க்கார் குள்ளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (32). இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.

இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நந்தகுமார் கோவையில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

பின்னர் கடந்த 18-ந் தேதி சத்தியமங்கலம் அடுத்த புத்தாண்டியூர் அய்யன் சாலையில் உள்ள பால்காரர் தோட்டத்தில் நந்தகுமார் தனது மனைவி சங்கீதாவுடன் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று நந்தகுமார் திடீரென விஷம் குடித்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் நந்தகுமார் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினர் உதவி உடன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து கணவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நந்தகுமாரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நந்தகுமார் இறந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News