உள்ளூர் செய்திகள்

சென்னிமலை காப்புக்காடு பகுதியில் திடீர் தீ விபத்து

Published On 2023-02-24 09:43 GMT   |   Update On 2023-02-24 09:43 GMT
  • காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.
  • இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.

சென்னிமலை:

சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் அருகே வனப்பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்த பகுதிகளில் தண்ணீரை பீய்சி அடித்தும்,

தீயணைப்பு வண்டி செல்ல இயலாத பகுதியில் தீயணைப்பு வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அந்த பகுதியில் யாரோ பீடி, சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு வீசிய நெருப்பால் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காப்புக்காடு பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து நடந்துள்ளது.

வனத்துறையினர் இந்த பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும் என்றும், காப்புக்காடு பகுதியில் விழிப்புணர்வு போர்டு வைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News