உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணை நிலவரம்

Published On 2023-10-03 14:52 IST   |   Update On 2023-10-03 14:52:00 IST
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது.
  • அணையின் நீர்மட்டம் 70.59 அடியாக சரிந்து உள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.59 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,395 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.65 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 10.82 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது

Tags:    

Similar News