கோபிசெட்டிபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- கோபிசெட்டிபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- 180 தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கோபி,
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியா ளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.சிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பு ஊசிகள் செலுத்துதல் மற்றும் மருந்துகள் வழங்கினர். மருத்துவ முகாமை நகர்மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜ், ஆணையாளர் சசிகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். துப்புரவு அலுவலர் சோழராஜ் துப்புரவு ஆய்வா ளர்கள் செந்தில்குமார் கார்த்திக் சௌந்தரராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 180 தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.