உள்ளூர் செய்திகள்
- அரச்சலூரில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முதியோர் உதவி த்தொகை, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை உள்பட 439 கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரச்சலூரில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.இதில் மண்டல துணை தாசில்தார் கற்பகம் தலைமை தாங்கினார்.
மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முதியோர் உதவி த்தொகை, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை உள்பட 439 கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் ஜெய்புன்னிஸா, பேரூர் தி.மு.க. செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி பொன்சுந்தர், வார்டு செயலாளர் மணி, நிர்வாகிகள் கவின்குமார், பொன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.