உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு வீட்டுக்குள் புகும் சாக்கடை கழிவு நீர்

Published On 2023-10-01 12:59 IST   |   Update On 2023-10-01 12:59:00 IST
  • கழிவுநீர் வெளியேறாமல் குடியிருப்பு வீட்டுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
  • நோய் தொற்றில் இருந்து தப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் யூனியன் கரட்டுப் பாளையம் ஊராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட ஆயிபாளையம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி யில் சாக்கடை வசதி இருந்தும் சரியான வடிகால் இல்லாத காரணத்தினால் கழிவுநீர் வெளியேறாமல் மழைக் காலங்களில் குடியிருப்பு வீட்டுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து ஆயி பாளையம் பொது மக்கள் கூறியதாவது:

எங்கள் ஊரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.

எங்கள் பகுதியில் சாக்கடை வசதி இருந்தும் சாக்கடை நீரானது எங்கள் பகுதியை விட்டு வெளியேறாமல் சரியான வடிகால் இல்லாததால் எங்கள் பகுதியிலேயே தேங்கி விடுகிறது.

மழைக்கா லங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுவதால் கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லை மற்றும் நோய் தொற்றுக்கு ஏற்படுகிறது.

இது குறித்து புகார் தெரிவித்ததன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் வடிகால் அமைக்க அளவீடு செய்து தோராயமாக ரூ.30 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

அதற்கு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை என கூறியதால் எங்கள் பகுதி மக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3-ல் ஒரு பங்கு நிதியை தாங்கள் தருவதாக தெரிவித்தும் இதுவரை பஞ்சாயத்து நிர்வாகம் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.

எனவே எங்கள் பகுதி மக்கள் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News