உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் மோதி பள்ளி மாணவன் பலி

Published On 2022-09-15 13:57 IST   |   Update On 2022-09-15 13:57:00 IST
  • சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.
  • குமராபுரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.

சென்னிமலை:

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி செர்லின். இவர்களுக்கு சுபாஷ் (15), கவிதன் (13), சந்தோஷ் (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

செர்லினுக்கும் அவரது கணவர் சுரேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து செர்லின் தனியாக வசித்து வருகிறார்.

இவர்களின் மூத்த மகன் சுபாஷ் மற்றும் கடைசி மகன் சந்தோஷ் இருவரும் செர்லினுடன் வசித்து வருகின்றனர். சந்தோஷ் சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் செர்லின். ஓட்டல் கடை வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதனால் சந்தோஷ் பள்ளிக்கு செல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார்.

இதையடுத்து சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது சென்னிமலை-வெள்ளோடு ரோட்டில் குமராபுரி பகுதியில் சந்தோஷ் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சந்தோஷ் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் படுகாயம் அடை ந்தார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தான்.

Tags:    

Similar News