உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்ட போது எடுத்த படம்.

மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-06-09 09:15 GMT   |   Update On 2023-06-09 09:15 GMT
  • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.
  • கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

கோபி:

கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் வேளாண்மை -உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நாகதேவம்பாளையம் கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிசான் கோஸ்தி எனும் வயல்விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வரவேற்று வேளாண்துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் இடு பொருட்களின் மானிய விவரங்கள் உள்ளிட்ட நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கமளித்ததுடன் உலக சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உழவர் ஆலோசனைக் குழுத் தலைவர் ரவீந்திரன் தலைமையேற்றார். ஈரோடு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு , வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்பதில் வேளாண் துறையின் பங்குகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்வணிகம், வேளாண் விற்பனைத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை,

கோபி மைராடா வேளாண் அறிவியல் நிலைய ஆராய்சியாளர் மற்றும் சத்தி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு அவரவர் துறை சார்ந்த அரசின் மானிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியதுடன் கருத்துக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.

மேலும் கால்நடைத் துறையின் சார்பாக கால்நடைகளுக்கான குடற்புழுநீக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இவ்விழாவின் முடிவில் வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் இலவசவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன். நாகதேவன்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கடுக்காம்பாளையம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் நடப்பட்டது.

இந்நிகழ்சியில் நாகதேவம்பாளையத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜனரஜ்ஜனி, வான்மதி, குமார், பெரியசாமி மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News