உள்ளூர் செய்திகள்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் தெற்கு வாசல் கோபுரம் அருகில் உள்ள சகஸ்ரலிங்கேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாரா பாத்திரம் மூலம் ஜல அபிஷேகம் செய்யப்பட்டு இருந்த காட்சி.

சங்கமேஸ்வரர், சகஸ்ரலிங்கேஸ்வரர் சாமிகளுக்கு தாரா பாத்திரம் மூலம் ஜல அபிஷேகம்

Published On 2023-05-11 14:44 IST   |   Update On 2023-05-11 14:44:00 IST
  • சுவாமியை குளிர வைக்கும் விதமாக ஜல அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
  • ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பவானி:

பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

அதேபோல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் அக்னி நட்சத்திரம் முடியும் நாள் வரை சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரான சங்கமேஸ்வரர் மற்றும் கோவில் தெற்கு கோபுரத்தின் பின் பகுதியில் உள்ள சகஸ்ரலிங்கேஸ்வரர் (1008 சிவலிங்கம்) ஆகிய சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு ஐதீக முறைப்படி தாரா பாத்திரத்தில் பன்னீர், வெற்றி வேர், தண்ணீர் நிரப்பப்பட்டு சாமியின் தலையின் (சிரசு) கீழ் ஒவ்வொரு சொட்டாக விழுந்து சுவாமியை குளிர வைக்கும் விதமாக தாரா பாத்திரம் அபிஷேகம் தினசரி நடைபெறுவது வழக்கம்.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி வருகின்ற 29-ந் தேதி முடிவடைய உள்ள நிலையில் அக்னி நட்சத்திர நாட்களான 26 நாட்களும் பவானி சங்கமேஸ்வரர் மற்றும் சகஸ்ர லிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு இந்த தாரா பாத்திரத்தின் மூலம் (சிரசு) சுவாமியை குளிர வைக்கும் விதமாக ஜல அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News