உள்ளூர் செய்திகள்

தமிழக- கர்நாடக எல்லையில் பலாப்பழங்கள் விற்பனை

Published On 2023-05-21 14:03 IST   |   Update On 2023-05-21 14:04:00 IST
  • விவசாயிகள் பலா பழங்கள் மரங்களை அதிகளவில் நட்டு உள்ளனர்.
  • தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே தாளவாடி, கடம்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி சாலை வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த பகுதி பசுமையாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள்.

இதனால் சத்தியமங்கலம் அடுத்து உள்ள மலைப்பகுதி யான தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், கெட்டவாடி, தலமலை உள்ளிட்ட பகுதி களில் கோடைக்காலம் உள்பட அனைத்து நாட்களிலும் குளிர்ச்சியான சீதோஷன நிலை நிலவி வருகிறது.

இந்த வனப்பகுதிகளில் விவசாயிகள் பலா பழங்கள் மரங்களை அதிகளவில் நட்டு உள்ளனர். இந்த மரங்களில் பலா பழங்கள் மே மாதம் பழுக்க ஆரம்பித்து விடுகிறது. தற்பொழுது மரங்களில் பலாப்பழங்களை வெட்டுவதற்கு சரியான காலநிலை என்பதால் ஆசனூர், திம்பம் ஆகிய இடங்களில் அதிக பலாப்பழங்களை காண முடிகிறது.

இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலா பழங்கள் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் பகுதிகளில் ரோட்டோரங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பலாப்பழங்களை விவசாயி களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றன. இதனையடுத்து பலாப்பழங்களை தமிழக- கர்நாடக எல்லையான புழிஞ்சூர் சோதனை சாவடி அருகே ரோட்டோரங்களில் கடைகள் அமைத்து விற்று வருகின்றனர்.

Tags:    

Similar News