உள்ளூர் செய்திகள்

லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளர் சிறையில் அடைப்பு

Published On 2023-02-15 09:36 GMT   |   Update On 2023-02-15 09:36 GMT
  • வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
  • இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

பெருந்துறையை சேர்ந்தவர் ரவி. இவர் தனது தாயாருக்கு வாரிசு சான்றி தழ் பெற பெருந்துறை வருவாய் அய்வாளர் அன்பரசனை அனுகினார்.

அப்போது வாரிசு சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.35 ஆயிரம் வேண்டும் என கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறி ரவி சென்று விட்டார்.

சில நாட்களுக்கு பிறகு அன்ப ரசன், ரவியிடம் ரூ.25 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார். அதற்கு ரவி சம்மதம் தெரிவிக்காததால் முடிவில் ரூ.8 ஆயிரம் தாருங்கள் வாரிசு சான்றிதழ் தருகிறேன் என கூறினார்.

ஆனால் லஞ்சம் தர விரும்பாத ரவி இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயி ரத்தை அவரிடம் கொடுத்து அன்பரசனிடம் கொடுக்க சொன்னார்கள்.

அதன்படி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற ரவி தான் கொண்டு வந்த பணத்தை அன்பரசனிடம் கொடுக்க சென்றார்.

ஆனால் அன்பரசன் பண த்தை வாங்காமல் அதை அலுவலக உதவியாளர் அலெக்சாண்டரிடம் கொடுக்க சொன்னார். இதையடுத்து ரவி ரூ.8 ஆயிரத்தை அலெக்சா ண்டரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்துடன் அலெக்சா ண்டரை கையும், களவுமாக பிடித்தனர். பிடிபட்ட அலெக்சாண்டர் இந்த பணத்தை வருவாய் ஆய்வாளர் அன்பரசன் சொல்லி தான் வாங்கினேன் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அன்பரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அன்பரசனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News