உள்ளூர் செய்திகள்

பவானி-அந்தியூர் ரோட்டில் ஆக்கிரப்புகள் அகற்றிய போது எடுத்த படம்.

பவானி-அந்தியூர் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-04-19 10:17 GMT   |   Update On 2023-04-19 10:17 GMT

பவானி:

பவானி-அந்தியூர் பிரிவு ரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பிரதான சாலை விரிவுபடுத்தும் நோக்கில் ரோட்டின் இரு பகுதிகளில் அகலப்படுத்தப்பட்டு புதிய தார் ரோடு போடப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த ரோட்டில் பவானி-அந்தியூர் பிரிவு பஸ் நிறுத்தம் முதல் காடையாம்பட்டி பஸ் நிறுத்தம் வரை ரோட்டின் இரு பகுதிகளிலும் பலர் ஆகிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக பவானி நெடுஞ்சாலை துறைக்கு புகார் சென்றது.

இதனைத்தொடர்ந்து பவானி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பவானி-அந்தியூர் பிரிவு ரோடு முதல் காடையாம்பட்டி வரை ரோட்டில் இரு பகுதிகளிலும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் மற்றும் மரத்தின் கிளைகள் ஆகியவற்றை அப்புற ப்படுத்தி போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது மரக்கிளைகள் வெட்டி எடுத்ததால் அந்தியூர் பிரிவு ரோட்டில் பஸ்சுக்காக காத்திருக்க மரத்தின் நிழல் இது நாள் வரை பயன்படுத்திய பயணிகள் மரத்தின் கிளைகள் வெட்டப்ப ட்டதால் நிழல் இல்லாமல் போகிறதே என பயணிகளும், அப்பகுதி பொதுமக்கள் பலரும் புலம்பினர்.

அதேபோல் மரக்கி ளைகளை அப்புறப்ப டுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர் ஆக்ரமிப்புகள் அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்கும் வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News