உள்ளூர் செய்திகள்
குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு அபராதம்
- குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது
- உணவு பாதுகாப்பு துறையினர் ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
டி.என்.பாளையம்,
டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை யினர் சோதனையில் ஈடுப ட்டனர். அப்போது டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். சோதனையில் ஈஸ்வரன் என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
அதைத்தொடர்ந்து ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர் சக்திவேல் கூறியதாவது; மளிகை கடையில் தரம் குறைவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 94 440423 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.