போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் திறப்பு
- ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.