உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-10-03 14:54 IST   |   Update On 2023-10-03 14:54:00 IST
  • கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, அக். 3-

ஈரோடு அடுத்த சித்தோடு மேட்டுப்பாளையம் மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (63). டிரைவர். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி யும், ஒரு மகனும் உள்ளனர்.

கருப்பண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கருப்பண்ணன் மட்டும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கருப்பண்ணன் அவரது மகனிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டு உள்ளார்.

ஆனால் அவரது மகன் இல்லையென்றதால் மனவே தனயைடைந்த கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News