உள்ளூர் செய்திகள்

சி.சி.டி.வி கேமிரா கடையில் புகுந்து பொருட்களை திருடியவர் கைது

Published On 2023-07-27 15:19 IST   |   Update On 2023-07-27 15:19:00 IST
  • கடைக்குள் புகுந்து திருடிய நபர் தாமரைச்செல்வன் என தெரிய வந்தது.
  • புளியம்பட்டி போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து அவர் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

புளியம்பட்டி:

புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கோவை-சத்தியமங்கலம் சாலையில் சி.சி.டி.வி. கேமிரா விற்பனை கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் வேலை செய்யும் கண்ணதாசன் என்பவர் கடந்த 23-ந் தேதி இரவு கடை கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.

அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர் கேமிரா பொருத்த பயன்படுத்தப் படும் உபகரணங்கள் அடங்கிய 2 பெட்டிகளை திருடி சென்றார்.

இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. கடை உரிமையாளர் ஜெயக்குமார் புகாரின்படி புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான நபர் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது கடைக்குள் புகுந்து திருடிய நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வாங்கினாங்கோம்பை பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் (28) என தெரிய வந்தது. இவர் சரக்கு வாகன ஓட்டுனர்.

இதையடுத்து புளியம்பட்டி போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து அவர் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News