உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர் நெஞ்சு வலியால் திடீர் சாவு

Published On 2022-11-24 09:54 GMT   |   Update On 2022-11-24 09:54 GMT
  • வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
  • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

ஈரோடு:

ஈரோடு அடுத்துள்ள குட்டைக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேம்புசாமி (61). இவர் கடந்த 30 வருடங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணாரி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணா –மலை சென்று கொண்டி ருந்தார். அவருடன் கிளீனர் குமார், கணக்காளர் செல்வ–ரத்தினம் ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அவருடன் வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இது குறித்து வேம்புசாமியின் மனைவி கண்ணம்மாள் (57) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News