உள்ளூர் செய்திகள்

மழைப்பொழிவினால் மண் சரிவு

Published On 2022-11-24 15:43 IST   |   Update On 2022-11-24 15:43:00 IST
  • அந்தியூரில் இருந்து தாமரைக்கரை பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலை உள்ளது.
  • இந்த பிரதான சாலையில் ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் மற்றும் மண் சாலை ஓரங்களில் ஆங்காங்கே உள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து தாமரைக்கரை பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலை உள்ளது.

இந்த மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு ஏற்பட்டு வந்த காரணத்தினால் இந்த பிரதான சாலையில் ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் மற்றும் மண் சாலை ஓரங்களில் ஆங்காங்கே இருப்பதினால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டு சென்று வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மண் சரிவை அகற்றி அந்தப் பகுதிகளில் மீண்டும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News