உள்ளூர் செய்திகள்

திருப்பூர் தொழில் அதிபர்கள் பலியானது எப்படி?

Published On 2023-06-05 08:18 GMT   |   Update On 2023-06-05 08:18 GMT
  • நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.
  • அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.

டி.என்.பாளையம், 

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி சில வருடங்களாக மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா ராமநாதபுரம் ஊராட்சி தொட்டகலாம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (36), தறிபட்டறை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் கொடிவேரி அணை பவானி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளனர்.

அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் வலது புறத்தில் ஆழமாக உள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த எச்சரிக்கை பலகையை மீறியும் போலீசாரின் அறிவுறுத்தலை மீறியும் ரமேஷ் மற்றும் ராமசாமி அணையில் இருந்து தண்ணீர் கொட்டும் ஆபத்தான பகுதியில் குளித்ததாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்பதால் எதிர்பாராத விதமாக ரமேஷ் மற்றும் ராமசாமி இருவரும் நீரில் மூழ்கினர்.

உடனே அங்கிருந்தோர் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை மற்றும் பங்களாப்புதூர் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணை ப்புத்துறை வீரர்கள் ரமேஷ் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்க ப்பட்டது. அதனையடுத்து கொடிவேரி அணைப்பகு தியில் ரமேஷை மீட்ட அதே பகுதியில் சிறிது நேரத்திற்கு பிறகு ராமசாமியை பிணமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், கொடிவேரி அணையின் பவானி ஆற்றுக்கு குளிக்க வந்த நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News