உள்ளூர் செய்திகள்

தரைமட்ட பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை

Published On 2023-11-11 06:56 GMT   |   Update On 2023-11-11 06:56 GMT
  • மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கோபி:

ஈரோடு மாவட்டத்தில் கட ந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நம்பியூரில் கடந்த 4-ந் தேதி இரவு 61 மில்லி மீட்டர், சத்தியமங்கலத்தில் 53 மில்லி மீட்டர் மழை பெய்ததால் நம்பியூர்-அரசூர் சாலையில் தட்டாம்பாளையம் தரைமட்ட பாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி சேதம் அடைந்தது. இத னால் 2 நாட்களாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பின் தரைமட்ட பாலம் சீரமைத்து 7-ந் தேதி வாகன போக்குவரத்து தொடங்கியது.

அன்று இரவு சத்தியமங்கலத்தில் 18 மில்லி மீட்டரும், நம்பியூரில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்ததால் தரைமட்ட பாலம் மீண்டும் மூழ்கி 2-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் நம்பியூ ரில் 123 மில்லி மீட்டர் மழை பெய்த தால் 3-வது முறையாக தரை மட்ட பாலம் வெள்ள த்தில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறாக மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தரைமட்ட பாலம் வழியாக குறைந்த அளவு நேற்று மதியம் மழை நீர் சென்றதால் நெடு ஞ்சாலை துறை சார்பில் மீண்டும் பாதை சீரமைக்கும் பணி முடிந்து தரைமட்ட பாலம் வழியாக இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என நெடுஞ்சாலைத்துறை சார்பாக போர்டு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இலகுரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்று வருகிறது.

Tags:    

Similar News