உள்ளூர் செய்திகள்

குருநாதசாமி கோவில் விழாவில் அலைமோதிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2023-08-14 14:16 IST   |   Update On 2023-08-14 14:16:00 IST
  • குருநாதசாமி கோவில் விழாவில் அலைமோதிய கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
  • அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து சென்றன

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது ப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்த ர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் வந்து அங்கு அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்ச ங்களை கண்டு களித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் குதிரை சந்தையை பார்த்து சென்றனர். மேலும் குடும்பத்துடன் பொது மககள் வந்து அங்கு அமைத்துள்ள பொழுது போக்கு அம்மசங்களில் விளையாடி குதூகளித்தனர்.

இதனால் அந்தியூர் அண்ணா மடுவு பகுதியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து சென்றன. தொட ர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றது. சிறிது தூரத்தை கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாக ஆகின. இதனால் அந்தியூர் பகுதியில் கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் இருந்து அத்தாணி சாலையில் பிரம்மதேசம் பிரிவு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் வனக்கோவில் புதுப்பாளையம் குருநாத சாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்து பொழுது போக்கு நிகழ்ச்சி களை கண்டு களித்து சென்றனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்தனர். போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் போலீ சார் பொதுமக்களோடு கூட்டத்தினுள் சென்று திருட்டு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தொடர்ந்த கண்காணித்து வந்தனர். வழக்கம்போல் குருநாதசாமி திருவிழாவின் போது வெள்ளிக்கிழமை சனிக்கிழமைகளில் மட்டுமே கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த ஆண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இது வரையில் இல்லாத அளவிற்கு கூட்டம் கட்டு க்கடங்காமல் மக்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News