உள்ளூர் செய்திகள்

நாய்கள் கடித்து ஆடுகள் பலி

Published On 2023-10-12 10:09 GMT   |   Update On 2023-10-12 10:09 GMT
  • நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன.
  • ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னிமலை:

சென்னிமலை யூனியன், வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட கொம்மக்கோயில், கும்மாக்காளி பாளையம், உருமாண்டம் பாளையம், கூனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. இது வரை பல ஆடுகள் இறந்துள்ளன.

இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கண க்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய்கள் பெருந்துறை, பணிக்கம் பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கு அருகே கூட்டமாக தங்கி இருப்பதாக தெரிய வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், ஆடு, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொம்மக்கோயில் கொல்லங்காடு, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆடுகளை காலை நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் இறந்து விட்டது. மேலும் 6 ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது.

Tags:    

Similar News