உள்ளூர் செய்திகள்
விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை
- சம்பவத்தன்று மதியம் மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
- இது குறித்து அவரிடம் கேட்டபோது விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, செம்மண் குழிக்காடு பெரிய காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மணி (66). விவசாயி. இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் மணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று மதியம் மனைவி விஜயா ரேஷன் கடைக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது நோய் காரணமாக வாழப்பிடிக்காமல் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக விஜயா அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.