உள்ளூர் செய்திகள்

என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-10-06 14:51 IST   |   Update On 2023-10-06 14:51:00 IST
  • மகேஷ்வரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு காசியண்ணன் வீதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (60). ஜெனரேட்டர் மெக்கானிக். இவரது மகன் மகேஷ்வரன் (28). பி.இ. படித்துள்ளார்.

இவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வீட்டிலேயே ஆன்லைன் மூலமாக 3 டி அனிமேஷன் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் தன்னுடன் படித்த நண்பர்கள் எல்லாம் நல்ல வேலை திருமணம் என செட்டி லாகி விட தனக்கு 28 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல், படிப்புக்கேற்ற வேலை இல்லாமல் இருக்கிறோமோ என புல ம்பி வந்துள்ளார்.

இதனால் வீட்டில் இருப்பவர்களிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டி ல் யாரும் இல்லாத நேரத்தில் மகேஷ்வரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று ள்ளார்.

மதியம் வீடு திரும்பிய மகேஷ்வரனின் தாயார் மகன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மகேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News