உள்ளூர் செய்திகள்

எலி மருந்து சாப்பிட்டு முதியவர் தற்கொலை

Published On 2022-12-15 15:02 IST   |   Update On 2022-12-15 15:02:00 IST
  • சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் வாந்தி எடுத்து உள்ளார்.
  • அவரை தாமோதரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பவானி:

பவானி கோனவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி மகன் தாமோதரன் இடம் கூறிவந்துள்ளார்.

தாமோதரன் தந்தைக்கு ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 4 மணிக்கு சுப்பிரமணியன் வாந்தி எடுத்து உள்ளார்.

இதையடுத்து அவரை தாமோதரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News