உள்ளூர் செய்திகள்

ஆட்கொல்லி யானை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி பராமரிப்பு பணி

Published On 2022-07-12 09:40 GMT   |   Update On 2022-07-12 09:40 GMT
  • ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.
  • இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தர்மாபுரம் பகுதியில் தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி மல்லப்பா என்பவரை மதித்துக் கொன்றது. அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப ட்டதை அடுத்து விவசாய கொன்ற ஆட்கொல்லி காட்டு யானையை அட ர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் வரவ ழைக்கப்பட்டது.

மேலும் அந்த ஆட்கொல்லி யானையை வனப்பகுதியை விட்டு வெளி–யேறாமல் தடுக்க இரியபுரம் வனப்ப–குதியில் இருந்து திகினாரை வரை 3.7 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழியை பராமரித்து ஆழம் மற்றும் அகலப்படுத்த வனத்துறை திட்டமிட்டு தற்போது பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்தி–ர–குமார்மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொ டர்ந்து கும்கி யானைகளை பயன்படுத்தி ஆட்கொல்லி யானையை கண்காணித்து வரும் குழுவினருடன் ஆலோ சனை நடத்தினார். அகழி பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்ப–ட்டுள்ளதா–கவும் தற்போது ஆட்கொல்லி யானை கோடம்பள்ளி வனப்பகுதிக்கு சென்று விட்டதாகவும் மீண்டும் ஊருக்குள் திரும்பி வராத வகையில் கும்கி யானைகள் மூலம் யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News