உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம். அருகில், சசி பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். ரமணிதரன் மற்றும் பலர் உள்ளனர்.

பர்கூர் மலைப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-07 09:23 GMT   |   Update On 2023-07-07 09:23 GMT
  • கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர்:

அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் பர்கூர் மலை ப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்த தை கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோ ட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

அனைத்து கட்சியினரும் அ.தி.மு.க, உடைந்துவிட்டது என நினைக்கின்றனர். ஆனால் அப்படியில்லை. ஆகஸ்ட் 20-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டம், அனை வரும் ஒன்றாகத்தான் உள்ள னர் என்பதை வெளிப்படு த்தும். அடித்தட்டு மக்கள் மேன்பட கல்வி ஒன்றால் தான் முடியும். அதை கவனத்தில் கொண்டு பள்ளி க்கல்வித்துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமணீதரன், கோவை மண்டல தகவல் தொழி ல்நுட்பப்பிரிவு பொரு ளாளர் மோகன்குமார், அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், அந்தியூர் ஒன்றிய செயலாளர் தே வராஜ், துணை செயலாளர் எஸ்.ஜி. சண்முகானந்தம், மேற்கு மாவட்ட மாணவ ரணி செயலாளர் குருராஜ், சசி பிரபு, அத்தாணி அ.தி.மு.க. கவுன்சிலர் வேலு மருதமுத்து,

ஒன்றிய ஜெயலலிதா பேரவை செய லாளர் ஓட்டல் கிருஷ்ணன், நகர இளைஞரணி செய லாளர் பார் மோகன், நகர பேரவை செயலாளர் பாலு சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா சம்பத், பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையன், சவுந்தரராஜன்,

நகைக்கடை அதிபர் கிருஷ்ணமூர்த்தி, முருக பிரகாஷ், கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராயண்ணன், இ.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அலையோசை அந்தோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்காடை, தாமரைக்கரை, தட்டக்கரை. பர்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News