- சம்பவத்தன்று வர்ஷினி ஆதார் கார்டு எடுத்து கொண்டு வருவதாக சொல்லி கொண்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- இதனையடுத்து காணாமல் போன தனது மகளை கண்டுப்பிடித்து தருமாறு தாய் ஜமுனாராணி கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஏமாகண்டனூர் சேக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரன். இவரது மகள் வர்ஷினி (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் வர்ஷி னிக்கு காரைக்குடியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் பெற்றோர்கள் கண்டித்து உள்ளார்கள். சம்பவத்தன்று வர்ஷினி ஆதார் கார்டு எடுத்து கொண்டு வருவதாக சொல்லி கொண்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவருக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என வந்துள்ளது. உடனே பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர்கள் வீடு என பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து காணாமல் போன தனது மகளை கண்டுப்பிடித்து தருமாறு தாய் ஜமுனாராணி கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.