உள்ளூர் செய்திகள்

கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆய்வு

Published On 2022-10-08 13:04 IST   |   Update On 2022-10-08 13:04:00 IST
  • பவானி போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
  • ஆய்வில் பவானி வட்டாரத்தில் உள்ள பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட வழக்கு கோப்புகளையும் பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டது.

பவானி:

பவானி போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பவானி வட்டாரத்தில் உள்ள பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட வழக்கு கோப்புகளையும் பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வை முடித்தபின் டி.ஐ.ஜி முத்துச்சாமி நிருபர்களிடம் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தை கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றிட டி.ஐ.ஜி. முதல் காவலர் வரை பாடுபட்டு வருகிறோம்.

அதேபோல் மிகப் பெரிய அளவில் ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா வழக்கு பதியப்பட்டு மாவட்டம் தோறும் தினசரி கஞ்சா விற்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வின்போது ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News