உள்ளூர் செய்திகள்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

Published On 2022-08-20 09:51 GMT   |   Update On 2022-08-20 09:51 GMT
  • கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை, அய்யம்பாளையம், பெருந்தலையூர், பொன்னாட்சி புதூர், குட்டியபாளையம், சலங்க பாளையம், வேலம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்பு சக்கரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்த விற்பனை கூடத்து க்கு கொண்டு வரப்படும் சர்க்கரை மூட்டைகள் குறிப்பாக பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கவுந்தப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News