உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவில் நடை அடைப்பு

Published On 2022-11-09 08:06 GMT   |   Update On 2022-11-09 08:06 GMT
  • சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.
  • பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது.

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டது.

அதனால், காலசந்தி பூஜை, உச்சிகாலம், சாயரட்சை பூஜை நடைபெற்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை சென்னிமலை முருகன் கோவில் சாமி மூலஸ்தான கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இருந்தாலும் பக்தர்களை பகல் 1.30 மணியில் இருந்து கோவில் பணியாளர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி நடைசாத்தப்பட்டது.

பின்னர் இரவு 7.35 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு கிரகண தோஷ சாந்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டடது. அதன் பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு வேங்கை மர ரதம் உலா நடைபெறவில்லை.

Tags:    

Similar News