அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர் திருவிழா
- அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர் திருவிழா நடக்கிறது
- கூடுதுறையில் இருந்து பக்தர்கள்தீர்த்த குடம் எடுத்து வந்தனர்
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி பெரும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு க்கான தேர்த்திருழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 26-ந் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) முதல் வன பூஜை விழா நடந்தது. இதையொட்டி இன்று காலை புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து 3 தேர்களில் காமாட்சி அம்மன், பெருமாள்சாமி, குருநாதசாமி ஆகிய 3 சாமிகளும் தேர்களில் வனக் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை அதிகாலை வன கோவிலிலிருந்து புது ப்பாளையம் கோவிலுக்கு வந்து சேரும். முதல் வன பூஜைக்கு தேர்களை எடுத்துச் செல்லும்போது பெண்கள் தேர்களின் முன் விழுந்து தங்களது வேண்டுதலை கூறி வணங்கி செல்வார்கள். அவ்வாறு வேண்டும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறுவதாக பெண்கள் பக்தர்கள் கூறுகின்றனர்.
முதல் வன பூஜைக்கு முன்தினம் குருநாதர் கோவி லுக்கு கடைசி தீர்த்தமாகவும் பெரிய கூடம் தீர்த்தமாகவும் சொல்லப்படும் தீர்த்த க்குடம் பவானி கூடுதுறை யில் இருந்து எடுத்து வரப்பட்டது. இதையடுத்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புதுப்பாளையம் வன கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து வரும் 9-ந் தேதி தேர்த்திருவிழா துவங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. 16-ந் தேதி பால் பூஜையுடன் பண்டிகை நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மோக னபிரியா பரம்பரை அறங்காவலர் பி.எஸ்.எஸ் சாந்தப்பன், பரம்பரை அரங்காவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.